Monday, April 26, 2010

சொல்

"என்னை மறந்து விடு" என்று சொல்வதைவிட
"இறந்துவிடு" என சொல்

ஏனெனில்,
உன்னை மறப்பதை விட இறப்பது சுகம்

Saturday, April 24, 2010

சிக்கல்

நீ உந்தன் கூந்தலைத்தான்
கோதினாய் - ஆனால்

என் இதயத்தில் அல்லவா
சிக்கல் விழுந்தது

இலக்கியம்

அன்று உன் வார்த்தைகளுக்கு கூட
அர்த்தம் புரியாது

இன்று உன் மௌனம் கூட
இலக்கியம் தான்

Friday, April 16, 2010

அன்பு

அன்பு என்ற சொல்லிற்கு
ஆதரவாய் எத்தனையோ சொற்கள்

ஒன்று பாசமாம், மற்றொன்று நேசமாம்,
இன்னொன்று காதலாம்

இப்படி வகைப்படுத்தியவர் வாழ்ந்தபோது
நீயும் வாழ்ந்திருந்தால்
உன்னையல்லவா உதாரணமாக்கி
இருப்பார்கள்

நல்லவேளை என் காலத்தில் நீ பிறந்தாய்
இல்லையென்றால்
என்னிதய சிம்மாசனத்தில்
ஏற்றமுடியாமல்
ஏட்டில் மட்டுமல்லவா பார்த்திருப்பேன்!

Wednesday, April 14, 2010

சிரிப்பு

உதட்டில் சிரிப்பது
ஊருக்கு தெரியும்!

உள்ளத்தில் அழுவது
யாருக்கு தெரியும்?

மௌனம்

என்னை கொல்ல
வீரியமான விஷம் வேண்டாம்
கூர்மையான வாள் வேண்டாம்

உன் சில நிமிட மௌனம் ஒன்றே போதும்
மறு ஜென்மம் வேண்டாமென்று
நான் இறக்க...

பிடித்தல்

என்னை எல்லோருக்கும்
பிடிக்கிறது...

அவளையும் எல்லோருக்கும்
பிடிக்கிறது...

எங்களைத்தான் யாருக்கும்
பிடிக்கவில்லை!!!