Thursday, June 10, 2010

ஜாதி

லிப்ஸ்டிக்கும் புடவைக்கும்
நாலு செட் நகைக்கும்
மாலையில் மல்லியும்
தினமொரு திரைப்படமும்
உன் கனவல்ல - அறிவேன்!

நீ வேறு ஜாதி!
நான் அதையுணர்ந்த ஜாதி!
தன்மானப் பெண்ணே தாங்குவேன் வா!

Saturday, June 5, 2010

காவியம்

காதலர் தோற்று
காதல் ஜெயிக்கும்
காவியக் காதலில் எனக்கு
சம்மதமில்லை!
நாம் காவியமாதல் வேண்டாம்!
இங்கே வாழ்க்கை வசீகரமானது!

Thursday, June 3, 2010

முட்டாள்

காதலிப்பவன் முட்டாள்
என்றான் நண்பன்!

உன்னை நினைத்தேன்!

மீண்டும் நினைத்தேன்!

மறுபடி நினைத்தேன்!

தீர்மானித்தேன்!
நான் அறிவாளியாக
மாற அவசியமில்லை என்று!

Tuesday, June 1, 2010

நோய்

கதிர்வீச்சை விடவும்
அபாயகரமானது
உன் கண் வீச்சு!

ஏழு பிறவிக்கும்
ஏற்பட்டே தீரும்
காதல் நோய்!!