Tuesday, October 20, 2015

பாசம்

அளவுக்கு அதிகமாக
ஒருவர் மேல்
பாசம் வைக்கும்
முன் தெரிந்துகொள்...

உனக்கு
அந்த உறவு,
நிரந்தரமானது அல்ல...

உன்னை விட்டு
ஒருநாள் பிரியுமென்று...

Thursday, October 15, 2015

மரணம்

மரணம் உன்னைவிட
பெரியதுதான் ஆனாலும்
அது உன்னை
ஒரே ஒருமுறைதான்
ஜெயிக்க முடியும்!

ஆனால் நீ வாழும்
ஒவ்வொரு நொடியும்
மரணத்தை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்
என்பதை மறந்து விடாதே!

Tuesday, October 13, 2015

புரிதல்

புரிந்து கொண்டால்
கோபம் கூட அர்த்தம்
உள்ளதாய் தெரியும்!

புரியவில்லை என்றால்
அன்பு கூட அர்த்தம்
அற்றதாய் தெரியும்!

Wednesday, October 7, 2015

ஞாபக மறதி

வாழ்க்கையில் நிம்மதி
தேவையென்றால்
ஞாபக மறதி
நிச்சயம் தேவை

Tuesday, October 6, 2015

கொடுமை

தப்பே செய்யாமல்
தலை குனிந்து நிற்கும் சூழ்நிலை
மிகவும் கொடுமையானது

அன்பு

அன்புக்கு மீறி
அன்பு வைத்தால் சின்ன சின்ன
பிரச்சனைகள் கூட பெரிய
தவறாக தெரிகிறது