Sunday, December 27, 2015

பிரிதல்

எனக்கு பிடிக்காத உறவுகளை
பிடித்திப்பதாய் பொய் சொல்லி
ஏமாற்றுவதைவிட,
பிடிக்கவில்லை என்று பிரிவதே
மேலானது!

Tuesday, December 22, 2015

சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்
ஏன் வாழ்கிறோம் என
புரிய வைக்கின்றனர்!

சில நேரங்களில் சில மனிதர்கள்
இன்னும் ஏன் வாழ்கிறோம் என
நினைக்க வைக்கின்றனர்!!

மரணம்

அடுத்தவனுக்கு
கிடைத்து விட்டதே
என பொறாமை படாத
ஓரே விசயம்
"மரணம்"