Wednesday, May 4, 2016

எச்சரிக்கை

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே
அடிமை ஆக்கி விடுவார்கள்!

அதிகம் பொறுமையுடன் நடக்காதே
பைத்தியம் ஆக்கி விடுவார்கள்!!

எல்லாம் வெளிப்படையாக இருந்துவிடாதே
வெறுமை ஆக்கி விடுவார்கள்!!!

எல்லாரையும் நம்பி விடாதே
ஏமாளி ஆக்கி விடுவார்கள்!!!!

கோபப்படாமல் இருந்து விடாதே
கோமாளி ஆக்கி விடுவார்கள்!!!!!

Monday, May 2, 2016

கவலை

உனக்காக யாரும்
இல்லை
என்ற கவலை
வேண்டாம்!

உனக்காக
அழுவதற்கு
உன் கண்கள்
இருக்கிறது!!

துடைப்பதற்கு
உன் கைகள்
இருக்கிறது!!!