Saturday, November 7, 2009

நினைவுகள்

அன்பே!
நீ பார்த்த அந்த முதல் பார்வை
நீ சிரித்த அந்த முதல் சிரிப்பு
நீ பேசிய அந்த முதல் வார்த்தை
நீ கை கோர்த்த அந்த முதல் ஸ்பரிசம்

இது என் மலரும் நினைவுகளா?
இல்லை மாறாத வடுக்களா?

Monday, October 19, 2009

உறக்கம்

என்னவளே!
உறக்கம் எனக்கு பிடிக்கவில்லை
உறக்கம் நினைவை கலைப்பதால்
நினைவில் நீ இருப்பதால்!!

காதல் தாஜ்மஹால்

காதலுக்காக நான் தாஜ்மகால்
எழுப்ப நினைக்கவில்லை!

காதலுக்காக நான் உன்னை
கை பிடிக்கவே நினைக்கிறேன்!

முத்தம்

உன் முதல் முத்தத்தின்
தாக்கமே இன்னும் இருக்க,
அடுத்த முத்தத்திற்கு
அவசியம் இல்லாமல் போனது!!

கடிதம்

உனக்கென நான் எழுதும்
கடிதத்தில் முற்றுப்புள்ளி வைக்க
முடியவில்லை

அதனால் உன்னை எண்ணி
துடிக்கும் என் இதயம் கொஞ்சம்
கிள்ளி வைக்கப்படும்

உன் மனம்

உன்னை நினைக்கும்போது
நான் அறிஞன் ஆனேன்!

உன்னை பார்க்கும்போது
நான் ஓவியன் ஆனேன்!

உன்னிடம் பேசும்போது
நான் கவிஞன் ஆனேன்!

உன்னிடம் பழகும்போது
நான் மனிதன் ஆனேன்!

உன் மனத்தினுள் நான் இல்லையென்றால்
நான் என்ன ஆவேன்?

Friday, October 16, 2009

பொருட்கள்

அன்பே!!

நான் பார்க்கும் பொருட்கள்
எல்லாம் அழகாக இருக்கின்றன, அவை
உன்னை எனக்கு நினைவு படுத்துவதால்!

உன்னை எனக்கு நினைவு படுத்துவதால், அவை
எல்லாம் எனக்கு அழகாக இருக்கின்றன!!

பெண்ணா? பிசாசா?

நின்றால் நடந்தால் நீ
திரும்பினால் விரும்பினால் நீ

உறக்கத்தில் கனவில் நீ
விடியலில் நினைவில் நீ

கண்ணே!
நீ என்ன பெண்ணா? இல்லை பிசாசா?

Wednesday, October 14, 2009

விடியல்

என்னவளே!
விடியல் எனக்கு பிடிக்கவில்லை!
விடியல் என் கனவை கலைப்பதால்!!
கனவில் நீ இருப்பதால்!!!

உறக்கம்

என்னவளே!
உறக்கம் எனக்கு பிடிக்கிறது!
உறக்கத்தில் கனவு வருவதால்!!
கனவில் நீ இருப்பதால்!!!

ரோஜா செடி

என்னவளே!
புகைவண்டி பாதையில் தலை சாய்ந்திருக்கும் ரோஜா செடி நான்! நீ நடந்து வருகிறாயா? ரயிலில் வருகிறாயா?

கன்னம்

என்னவளே!
உன் கன்னம் ஏன் சிவந்திருக்கிறது? காதோரம் நீ வைத்த ரோஜாவின் இதழ் வருடிவிட்டதா?

என்னவனே!
நன்றாய் உற்று பார், உன்னை கண்டதும் சிவந்த என் கன்னத்து பிரதிபலிப்பை காட்டும் வெள்ளை ரோஜாதான் அது!!

இதயம்

அன்பே!
என் இதயம் எனக்கு துரோகம் செய்கிறது, அது என்னிடம் இருந்து கொண்டு உன்னையே நினைக்கிறது