Friday, July 17, 2015

ஆறுதல்

நீ அழும்போது
முதலில் ஆறுதல் சொல்வது
நீ
நேசித்தவராக இருக்கமாட்டார்கள்!

உன்னை
நேசித்தவராகத்தான் இருப்பார்கள்!!

Tuesday, July 7, 2015

சோகம்

இறந்த கால
சோகத்தின் வேர்கள்...

நிகழ்கால சுகங்களை
மட்டும் அல்ல...

எதிர்கால சொர்க்கத்தையும்
சிதைத்து விடும்...!!!

Monday, July 6, 2015

வலி

நிராகரிப்பினால் கிடைக்கும் வலி
என்னவென்று உனக்கு நடக்கும் வரை
அதை உன்னால் உணர முடியாது!!

உரிமை

பிடித்தவர்களிடம்
கேட்காமலே எடுத்துகொள்ளும்
அதிகபடியான உரிமை!

இருவரையும்
வருத்தப்பட வைக்கிறது
சில சமயங்களில்!