Sunday, September 27, 2015

பேச்சு

பேசி பயனில்லை என்னும் போது
மெளனம் சிறந்தது!

பேசுவதிலே அர்த்தம் இல்லை
என்னும் போது
பிரிவும் சிறந்தது!!

Friday, September 25, 2015

மதிப்பு

உன்னை மதிப்பவரிடம்
தாழ்ந்து பேசனும்!

உன்னை மிதிப்பவரிடம்
வாழ்ந்து பேசனும்!!

Thursday, September 24, 2015

புரிதல்

புரிதல் இல்லாத
உறவுகளிடம்...

பிரிதல் உண்டாகும்!

பிரிதல் இல்லாத
உறவுகள் ...

உலகில் இல்லை!
ஆனாலும்...

உலகில் உலவும்
உறவுகளில் எல்லாம்
புரிதல் என்பது
புரியாத...
புதிராகத்தான் உள்ளது...!!!

அன்பு

தகுதி அற்றவர்களிடம்
நீ வைக்கும் அன்பு

தயக்கம் இன்றி
உன்னை தவிக்க விட்டு
செல்லும்!