Tuesday, June 28, 2016

போராட்டம்

தேவைப்படும் போது பழகுவதும்
தேவை இல்லாதபோது எடுத்தெரிவதும்
இருக்கும் வரை!

மனித உறவுகளுக்குள்
ஏமாற்றங்களும்
மன போராட்டங்களும்
தொடரத்தான் செய்யும்!!

Friday, June 24, 2016

நாம்

நாம்
இல்லாவிட்டால்
யாரும்
வருந்துவதில்லை!

நம் இடத்திற்கு
வேறு ஒருவரை
தேர்ந்தெடுக்கிறார்கள்!!

Thursday, June 16, 2016

குருட்டு நம்பிக்கை

சில சமயங்களில் அன்பானவர்களிடம்
அதிகம் கோபத்தை காட்டி விடுகிறோம்!

எப்படியும் நம்மை மன்னித்து விடுவார்கள்
என்ற குருட்டு நம்பிக்கையில்!!

தேவை

தேவைப்படும் போது
நல்லவர்களாக
தெரியும் நாம்தான்,
அவர்களது தேவைகள்
தீர்ந்தவுடன்
கெட்டவர்களாகி
விடுகின்றோம்

Tuesday, June 14, 2016

வலி

அதிகமான அன்பு
அதிகமான நம்பிக்கை
அதிகமான ஆசை
இருக்க கூடாது!

மீறினால் வலிதான்!!

Friday, June 10, 2016

வாழ்க்கை

நினைப்பது போல வாழ்க்கை
எல்லோருக்கும்
அமைந்து விடுவதில்லை!

அழகாய் அமைந்த
வாழ்க்கையை சிலருக்கு
வாழ தெரிவதில்லை!!