Tuesday, March 27, 2012

கண்ணீர்

நீ என்னை பிரிந்தாலும்
நீ என்னை மறந்தாலும்

என்றாவது நீ என்னை நினைக்கும் போது
கண்களில் இருப்பேன் கண்ணீராக!!

Friday, March 23, 2012

அழுகை

என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ
எனக்கு தெரியாது?

ஆனால் …
உனக்கு அழுகை வந்தாலே
என் உயிர் போய்விடும்!!

Saturday, March 10, 2012

வாழ்க்கை

நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது!

நாம் வாழ்ந்து முடிந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது!!

புரிதல்

என்ன சொல்லி என்ன!
என்ன எழுதி என்ன!

நான் சொல்ல வருவதைத் தவிர!
எல்லாம் புரிகிறது உனக்கு!!