Thursday, August 18, 2016

அன்பு

கிடைக்கும் போது தவறவிட்ட அன்பு
தேடும்போது கிடைக்காது!

வாழ்க்கை

வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே!
சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது!!

Saturday, August 6, 2016

அனாதை

தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்..
சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்..
பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்..

இவர்களுடன் இருப்பதை விட, அனாதையாக வாழ்வது மேல்...

Monday, August 1, 2016

வலி

ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,

அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது

வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!

Saturday, July 30, 2016

மனசுக்கு பிடித்தது

மனசுக்கு பிடித்ததை செய்..
நாம இறந்தபிறகு யாரும் நமக்காக சிலை வைக்க போறதில்லை.

Friday, July 1, 2016

வலி

செய்யாத தப்புக்கு கிடைக்கிற தண்டனையாலும்
மறக்க நினைக்கிறதை நினைவு படுத்துவதாலும்
கிடைக்கிற வலிக்கு உயிர் போறதே மேல்.

Tuesday, June 28, 2016

போராட்டம்

தேவைப்படும் போது பழகுவதும்
தேவை இல்லாதபோது எடுத்தெரிவதும்
இருக்கும் வரை!

மனித உறவுகளுக்குள்
ஏமாற்றங்களும்
மன போராட்டங்களும்
தொடரத்தான் செய்யும்!!

Friday, June 24, 2016

நாம்

நாம்
இல்லாவிட்டால்
யாரும்
வருந்துவதில்லை!

நம் இடத்திற்கு
வேறு ஒருவரை
தேர்ந்தெடுக்கிறார்கள்!!

Thursday, June 16, 2016

குருட்டு நம்பிக்கை

சில சமயங்களில் அன்பானவர்களிடம்
அதிகம் கோபத்தை காட்டி விடுகிறோம்!

எப்படியும் நம்மை மன்னித்து விடுவார்கள்
என்ற குருட்டு நம்பிக்கையில்!!

தேவை

தேவைப்படும் போது
நல்லவர்களாக
தெரியும் நாம்தான்,
அவர்களது தேவைகள்
தீர்ந்தவுடன்
கெட்டவர்களாகி
விடுகின்றோம்

Tuesday, June 14, 2016

வலி

அதிகமான அன்பு
அதிகமான நம்பிக்கை
அதிகமான ஆசை
இருக்க கூடாது!

மீறினால் வலிதான்!!

Friday, June 10, 2016

வாழ்க்கை

நினைப்பது போல வாழ்க்கை
எல்லோருக்கும்
அமைந்து விடுவதில்லை!

அழகாய் அமைந்த
வாழ்க்கையை சிலருக்கு
வாழ தெரிவதில்லை!!

Wednesday, May 4, 2016

எச்சரிக்கை

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே
அடிமை ஆக்கி விடுவார்கள்!

அதிகம் பொறுமையுடன் நடக்காதே
பைத்தியம் ஆக்கி விடுவார்கள்!!

எல்லாம் வெளிப்படையாக இருந்துவிடாதே
வெறுமை ஆக்கி விடுவார்கள்!!!

எல்லாரையும் நம்பி விடாதே
ஏமாளி ஆக்கி விடுவார்கள்!!!!

கோபப்படாமல் இருந்து விடாதே
கோமாளி ஆக்கி விடுவார்கள்!!!!!

Monday, May 2, 2016

கவலை

உனக்காக யாரும்
இல்லை
என்ற கவலை
வேண்டாம்!

உனக்காக
அழுவதற்கு
உன் கண்கள்
இருக்கிறது!!

துடைப்பதற்கு
உன் கைகள்
இருக்கிறது!!!

Friday, April 29, 2016

பாசம்

பாசம் காட்டாவிட்டாலும்
பரவாயில்லை!

வேஷம் காட்டாதீர்கள்!!

Thursday, April 28, 2016

அர்த்தம்

நீ நேசிக்கும்
இதயத்தில் பல ஆண்டுகள்
வாழ்வதைவிட

உன்னை நேசிக்கும்
இதயத்தில் சில நொடிகள்
வாழ்ந்து பார்

அன்பின் அர்த்தம் புரியும்