Sunday, December 27, 2015

பிரிதல்

எனக்கு பிடிக்காத உறவுகளை
பிடித்திப்பதாய் பொய் சொல்லி
ஏமாற்றுவதைவிட,
பிடிக்கவில்லை என்று பிரிவதே
மேலானது!

Tuesday, December 22, 2015

சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்
ஏன் வாழ்கிறோம் என
புரிய வைக்கின்றனர்!

சில நேரங்களில் சில மனிதர்கள்
இன்னும் ஏன் வாழ்கிறோம் என
நினைக்க வைக்கின்றனர்!!

மரணம்

அடுத்தவனுக்கு
கிடைத்து விட்டதே
என பொறாமை படாத
ஓரே விசயம்
"மரணம்"

Tuesday, October 20, 2015

பாசம்

அளவுக்கு அதிகமாக
ஒருவர் மேல்
பாசம் வைக்கும்
முன் தெரிந்துகொள்...

உனக்கு
அந்த உறவு,
நிரந்தரமானது அல்ல...

உன்னை விட்டு
ஒருநாள் பிரியுமென்று...

Thursday, October 15, 2015

மரணம்

மரணம் உன்னைவிட
பெரியதுதான் ஆனாலும்
அது உன்னை
ஒரே ஒருமுறைதான்
ஜெயிக்க முடியும்!

ஆனால் நீ வாழும்
ஒவ்வொரு நொடியும்
மரணத்தை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்
என்பதை மறந்து விடாதே!

Tuesday, October 13, 2015

புரிதல்

புரிந்து கொண்டால்
கோபம் கூட அர்த்தம்
உள்ளதாய் தெரியும்!

புரியவில்லை என்றால்
அன்பு கூட அர்த்தம்
அற்றதாய் தெரியும்!

Wednesday, October 7, 2015

ஞாபக மறதி

வாழ்க்கையில் நிம்மதி
தேவையென்றால்
ஞாபக மறதி
நிச்சயம் தேவை

Tuesday, October 6, 2015

கொடுமை

தப்பே செய்யாமல்
தலை குனிந்து நிற்கும் சூழ்நிலை
மிகவும் கொடுமையானது

அன்பு

அன்புக்கு மீறி
அன்பு வைத்தால் சின்ன சின்ன
பிரச்சனைகள் கூட பெரிய
தவறாக தெரிகிறது

Sunday, September 27, 2015

பேச்சு

பேசி பயனில்லை என்னும் போது
மெளனம் சிறந்தது!

பேசுவதிலே அர்த்தம் இல்லை
என்னும் போது
பிரிவும் சிறந்தது!!

Friday, September 25, 2015

மதிப்பு

உன்னை மதிப்பவரிடம்
தாழ்ந்து பேசனும்!

உன்னை மிதிப்பவரிடம்
வாழ்ந்து பேசனும்!!

Thursday, September 24, 2015

புரிதல்

புரிதல் இல்லாத
உறவுகளிடம்...

பிரிதல் உண்டாகும்!

பிரிதல் இல்லாத
உறவுகள் ...

உலகில் இல்லை!
ஆனாலும்...

உலகில் உலவும்
உறவுகளில் எல்லாம்
புரிதல் என்பது
புரியாத...
புதிராகத்தான் உள்ளது...!!!

அன்பு

தகுதி அற்றவர்களிடம்
நீ வைக்கும் அன்பு

தயக்கம் இன்றி
உன்னை தவிக்க விட்டு
செல்லும்!

Tuesday, August 11, 2015

துணிச்சல்

இறப்பதற்கு
ஒரு நொடி
துணிச்சல் போதும்!

ஆனால்
வாழ்வதற்கு
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும்!!

கஷ்டம்

யாரையும் கஷ்டப்படுத்த கூடாது
என்று நினைப்பவன் தான்!

எல்லோராலும் கஷ்டத்தை
அனுபவிக்கிறான்!!

Thursday, August 6, 2015

இழப்பு

இழக்க
விரும்பாவிட்டாலும்!

இழந்து தான்
ஆக வேண்டி
இருக்கிறது சிலவற்றை
வாழ்வில்!!

Friday, July 17, 2015

ஆறுதல்

நீ அழும்போது
முதலில் ஆறுதல் சொல்வது
நீ
நேசித்தவராக இருக்கமாட்டார்கள்!

உன்னை
நேசித்தவராகத்தான் இருப்பார்கள்!!

Tuesday, July 7, 2015

சோகம்

இறந்த கால
சோகத்தின் வேர்கள்...

நிகழ்கால சுகங்களை
மட்டும் அல்ல...

எதிர்கால சொர்க்கத்தையும்
சிதைத்து விடும்...!!!

Monday, July 6, 2015

வலி

நிராகரிப்பினால் கிடைக்கும் வலி
என்னவென்று உனக்கு நடக்கும் வரை
அதை உன்னால் உணர முடியாது!!

உரிமை

பிடித்தவர்களிடம்
கேட்காமலே எடுத்துகொள்ளும்
அதிகபடியான உரிமை!

இருவரையும்
வருத்தப்பட வைக்கிறது
சில சமயங்களில்!

Wednesday, June 17, 2015

சந்தோசம்

சின்ன சின்ன விஷயங்கள்
சந்தோசம் தரும்!

ஆனால் சந்தோசம்
சின்ன விசயமில்லை!!

அனுபவித்து வாழுங்கள் வாழ்க்கையை!!!

நேசி

யாருடன் வாழ முடியுமோ
அவர்களை நேசிப்பதைவிட!

யார் இல்லாமல் வாழ முடியாதோ
அவர்களை அதிகமாக நேசியுங்கள்!!

Monday, June 1, 2015

தெரிந்தவர்கள்

எல்லோருக்கம்
என்னை தெரிந்தாலும்
என்னை புரிந்தவர்கள்
வெகு சிலரே!!

Tuesday, May 26, 2015

மாற்றம்

அழைக்காத கைபேசிக்கும்
வராத குறுங்தகவலுக்கும்
காத்திருக்கிறேன்!

ஏனோ
நான் இப்படி மாறிப்போனது
ஏனோ!!

Monday, May 25, 2015

பயணம்

நான்
திரும்பி
வரமுடியாத பயணம்
என் மரணம்!

அன்பு

சிலர் அன்பை
வார்த்தைகளால் உணர்த்தலாம்!

சிலர் அன்பை
உணர்வுகளால் உணர்த்தலாம்!

ஆனால்
சிலர்
அன்பை உணர முடியாது!

அதை காலம்
உணர்த்தும்போது ....?

அருமை

அன்பு
கிடைத்தவர்களுக்கு
தெரியாது!

கிடைக்காதவர்களுக்கு
புரியாது!

தொலைத்தவர்களுக்குத்தான்
தெரியும்
அதன் அருமை!

Thursday, May 21, 2015

அன்பு

எல்லா ஆண்களுக்கும்
கிடைப்பதில்லை!

தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு
ஒரு பெண்ணின் உண்மையான அன்பு!!

நிம்மதி

உலகில்
நிம்மதியாக
வாழ ஒரே வழி!

யாரையும்
நேசிக்காமல்
இருப்பது தான்!!

மாற்றம்

மாற்றங்களுக்கு காரணம்

சிலர் தரும் ஏமாற்றங்கள்தான்!!

Wednesday, May 20, 2015

பாடம்

வாழ்க்கையில் எதுவும்
சொல்லிட்டு வருவதில்லை!

வந்தது எதுவும்
சொல்லிக் கொடுக்காமல் போவதில்லை!!

பிரிவு

கண்களின்
அனுமதி கேட்டா
நான் உன்னை பார்த்தேன்?

இதயத்தின்
அனுமதி கேட்டா
நீ என்னுல் வந்தாய்?

நம் இருவரின்
அனுமதி கேட்டா
காதல் நம்முள் வந்தது?

இப்போது
யார் அனுமதி கேட்டு
என்னை நீ பிரிந்தாய்?

ஆசை

எனக்கு
என்னை
பிடித்திருப்பதே!

உனக்கும்
என்னை
பிடித்திருப்பதால்தான்!! 

நம்பிக்கை

எல்லோரும் என்னை
விட்டுப் போனார்கள்!

எல்லாமும் என்னை
விட்டுப் போயின!!

எஞ்சியிருப்பது
நானும் எனது
நம்பிக்கையும்தான்!!!

Sunday, May 10, 2015

இதயம்

எந்த ஒரு இதயம்
உன்னை பார்க்க கூடாது
என்று சொல்லி மறக்க துடிக்கின்றதோ?

அந்த இதயம் தான்
உன்னை அதிகமாக நேசிக்கும்..

உண்மை

ஆண்
உண்மையாக இருந்தால்
பெண் ஏமாற்றி விடுகிறாள்!

பெண்
உண்மையாக இருந்தால்
ஆண் ஏமாற்றி விடுகிறான்!!

இருவரும்
உண்மையாக இருந்தால்
இறைவன் ஏமாற்றி விடுகிறான்!!!

உயிர்

அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்துகொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன்!!

காதல்

உனக்கு
காதலிக்கத் தெரியவில்லையென
வருத்தப்படாதே

காதலிக்கிறேன்
என்று மட்டும் சொல்

உனக்கும்
சேர்த்து நான்
காதலிக்கிறேன்

ஆசை

எனக்கு
என்னை
பிடித்திருப்பதே!

உனக்கும்
என்னை
பிடித்திருப்பதால்தான்!!