உண்மையான
உண்மையை சொல்லவா?
சந்திக்கும்போதைவிட
சந்திக்காதபோதுதான்
உன்னை அதிகம் ரசிக்கிறேன்!
Thursday, May 27, 2010
நகைப்பு
நேற்று என் கனவில்
நகைத்தது ஏன்?
வாகனம் எடுத்து வந்ததில்
பாவம் ஒரு கோழி
இனி நகைக்காதே
முட்டைகள் தேவை
நகைத்தது ஏன்?
வாகனம் எடுத்து வந்ததில்
பாவம் ஒரு கோழி
இனி நகைக்காதே
முட்டைகள் தேவை
அனுமதி
மூங்கில் காட்டில் காற்றின் தழுவல்
எவர் உத்தரவில்!
அங்கே புல்லாங்குழலின் கீதம் பிறந்தது
யாரின் கண்ணசைவில்!
என் இதயம் நழுவி உன்னில் விழுந்ததும்
அவரின் அனுமதியில்!
எவர் உத்தரவில்!
அங்கே புல்லாங்குழலின் கீதம் பிறந்தது
யாரின் கண்ணசைவில்!
என் இதயம் நழுவி உன்னில் விழுந்ததும்
அவரின் அனுமதியில்!
சப்தம்
அருவிகள் கொட்டட்டும்,
இடிகள் இடிக்கட்டும்,
குண்டுகள் வெடிக்கட்டும்!
எனக்கு மட்டும் கேட்கும்
உன் முணுகல் சப்தம்,
உன் பெருமூச்சு கூட
என்னுள் மனப்பாடம்
இடிகள் இடிக்கட்டும்,
குண்டுகள் வெடிக்கட்டும்!
எனக்கு மட்டும் கேட்கும்
உன் முணுகல் சப்தம்,
உன் பெருமூச்சு கூட
என்னுள் மனப்பாடம்
அறிவிப்பு
பெண்ணை வர்ணித்து கவிதை
எழுதின மற்றும் எழுதும்
அத்தனை பேருக்கும்
ஓர் இனிய அறிவிப்பு
விடுத்து உள்ளேன்,
"உங்கள் கற்பனைக் காரிகையைக்
காண ஆவலா?
என்னை அணுகவும்.
என்னவளைக் காட்டுகிறேன்"
என்று
எழுதின மற்றும் எழுதும்
அத்தனை பேருக்கும்
ஓர் இனிய அறிவிப்பு
விடுத்து உள்ளேன்,
"உங்கள் கற்பனைக் காரிகையைக்
காண ஆவலா?
என்னை அணுகவும்.
என்னவளைக் காட்டுகிறேன்"
என்று
Wednesday, May 26, 2010
மெளனம்
சிலருக்கு விழிகளே ஆயுதம்
சிலருக்கு சிரிப்பே ஆயுதம்
இன்னும் சிலர் இருக்கிறார்கள்
அவர்களுக்கு மெளனமே ஆயுதம்
வீசிப் பார்த்த போதும்
பேசிப் பார்த்த போதும்
விழாதவனை மெளனமாக கொல்வது
அற்புதமான கலை!
சிலருக்கு சிரிப்பே ஆயுதம்
இன்னும் சிலர் இருக்கிறார்கள்
அவர்களுக்கு மெளனமே ஆயுதம்
வீசிப் பார்த்த போதும்
பேசிப் பார்த்த போதும்
விழாதவனை மெளனமாக கொல்வது
அற்புதமான கலை!
வெறுப்பு
என்னை எங்கே பார்த்தாலும்
முகத்தை திருப்பிக் கொள்!
என் பெயரை யார் உச்சரித்தாலும்
காதுகளை பொத்திகொள்!
எந்த கடிதத்ததை நான் கொடுத்தாலும்
படிக்காமல் கிழித்து விடு!
நான் கனவில் வந்தால்
தூங்காமல் விழித்திரு!
ஏன் காரணம் புரியவில்லையா?
அடிப்பததைத்தான் அணைக்க முடியும்!!
வெறுப்பத்தைத்தான் விரும்ப முடியும்!!
முகத்தை திருப்பிக் கொள்!
என் பெயரை யார் உச்சரித்தாலும்
காதுகளை பொத்திகொள்!
எந்த கடிதத்ததை நான் கொடுத்தாலும்
படிக்காமல் கிழித்து விடு!
நான் கனவில் வந்தால்
தூங்காமல் விழித்திரு!
ஏன் காரணம் புரியவில்லையா?
அடிப்பததைத்தான் அணைக்க முடியும்!!
வெறுப்பத்தைத்தான் விரும்ப முடியும்!!
Tuesday, May 25, 2010
வாழ்க்கை
நான் ஒரு ரோஜாச் செடி!
இன்ப பூக்கள் பூத்தாலும்
துன்ப முட்கள்
நிரந்தரமாய் என்னில் இருக்கிறது!
புரிகிறது இதுதான்
வாழ்க்கை!!
இன்ப பூக்கள் பூத்தாலும்
துன்ப முட்கள்
நிரந்தரமாய் என்னில் இருக்கிறது!
புரிகிறது இதுதான்
வாழ்க்கை!!
முடிவு
போதுமடி பெண்ணே!
எனக்குள் நானே வெடித்து,
உடைந்து,
கரைந்து,
வழிந்தது போதும்!
இனியாவது உன்
முகமூடியை கிழித்து
முகவரியை வெளிப்படுத்து!
"சரி" என்றில்லை
"முடியாது" என்றாவது
முடிவாக முடிவை வெளிப்படுத்து!
எனக்குள் நானே வெடித்து,
உடைந்து,
கரைந்து,
வழிந்தது போதும்!
இனியாவது உன்
முகமூடியை கிழித்து
முகவரியை வெளிப்படுத்து!
"சரி" என்றில்லை
"முடியாது" என்றாவது
முடிவாக முடிவை வெளிப்படுத்து!
Monday, May 24, 2010
Sunday, May 23, 2010
தாடி
தாயின் கருவினில் வந்தேன்
பூமியில் பிறப்பதற்கு
பாட சாலைக்கு சென்றேன்
பாடம் படிப்பதற்கு
கல்லூரிக்கு வந்தேன்
நான் காதலிப்பதற்கு
நான் காதலித்தேன்
தாடி வளர்ப்பதற்கா?
பூமியில் பிறப்பதற்கு
பாட சாலைக்கு சென்றேன்
பாடம் படிப்பதற்கு
கல்லூரிக்கு வந்தேன்
நான் காதலிப்பதற்கு
நான் காதலித்தேன்
தாடி வளர்ப்பதற்கா?
காதலில் தோல்வி
கம்பன் காலத்திலிருந்தே
காதலில் தோல்வி என்பது
செய்தியாயிருந்தது
இன்று
எனக்குள் நிகழ்ந்தபோது
சுடுகிறது!
காதலில் தோல்வி என்பது
செய்தியாயிருந்தது
இன்று
எனக்குள் நிகழ்ந்தபோது
சுடுகிறது!
அழுகுணீ சித்தர்
அழுகுணீ சித்தர் என்றே என்னை
அடையாளம் காட்டினார்கள்
அழ வைத்தவளே!
உன் அழகைத்தான்
இன்னமும் வர்ணிக்கிறார்கள்!!
அடையாளம் காட்டினார்கள்
அழ வைத்தவளே!
உன் அழகைத்தான்
இன்னமும் வர்ணிக்கிறார்கள்!!
Saturday, May 22, 2010
பல்கலைக்கழகம்
உன்னைப் பார்த்து
காதலை கற்றுக் கொண்டேன்
உன் அழகைப் பார்த்து
ஆசையை கற்றுக் கொண்டேன்
உன் சிரிப்பைப் பார்த்து
ஏக்கத்தை கற்றுக் கொண்டேன்
மொத்தத்தில் பெண்ணே!
நீ ஒரு பல்கலைக்கழகம்!!
காதலை கற்றுக் கொண்டேன்
உன் அழகைப் பார்த்து
ஆசையை கற்றுக் கொண்டேன்
உன் சிரிப்பைப் பார்த்து
ஏக்கத்தை கற்றுக் கொண்டேன்
மொத்தத்தில் பெண்ணே!
நீ ஒரு பல்கலைக்கழகம்!!
Friday, May 21, 2010
மேகம்
வெறுமனே மின்னலை மட்டும்
வீசி எறிந்து விட்டு,
பொழிய மறுத்து
போகும் மேகமாய்!
பார்வைகளை மட்டுமே
வீசிவிட்டு நீ போகிறாய்
இங்கே வறண்ட நிலமாக
நான்!!
வீசி எறிந்து விட்டு,
பொழிய மறுத்து
போகும் மேகமாய்!
பார்வைகளை மட்டுமே
வீசிவிட்டு நீ போகிறாய்
இங்கே வறண்ட நிலமாக
நான்!!
கொலுசு சத்தம்
மாலைத் தென்றல், மழையின் சாரல், மயிலிரகின் வருடல்
- இவை தருகின்ற சிலிர்ப்பைக்
காட்டிலும் நூறு மடங்கு அதிகம்
என்னை சிலிர்க்க வைப்பது
உன் கொலுசு சத்தம்
- இவை தருகின்ற சிலிர்ப்பைக்
காட்டிலும் நூறு மடங்கு அதிகம்
என்னை சிலிர்க்க வைப்பது
உன் கொலுசு சத்தம்
Subscribe to:
Posts (Atom)